உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் சண்முகம் எம்.பி., திட்டவட்டம்

அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் சண்முகம் எம்.பி., திட்டவட்டம்

செஞ்சி : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என சண்முகம் எம்.பி., பேசினார்.செஞ்சியில், அனந்தபுரம் நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ், ஒன்றிய செயலாளர் சோழன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., பேசியதாவது.கடந்த தேர்தலில், 75 இடங்களில் வெற்றி பெற்றோம். துரோகிகளால் 30 இடங்களில் குறைந்த ஓட்டில் வாய்ப்பை இழந்தோம். இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டும். நிர்வாகிகளின் செயல்பாட்டை பார்த்து பொதுச்செயலாளருக்கு செஞ்சி தொகுதிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இப்போதே தேர்தல் பணியை துவங்குங்கள். வீடுவீடாக சென்று ஒவ்வொரு வாக்காளரும் எந்த கட்சி சார்ந்தவர், கட்சி சாராதவர் என பட்டியல் எடுங்கள். ஆட்சி அமைவது உங்கள் கையில் உள்ளது. வரும் 11ம் தேதி மாலை 5:00 மணிக்கு பொதுச்செயலாளர் செஞ்சிக்கு வர உள்ளார்.இது வரை செஞ்சி நகரம் பார்த்திராத கூட்டமாக அந்த கூட்டம் இருக்க வேண்டும். இவ்வாறு சண்முகம் எம்.பி., பேசினார்.கூட்டத்தில் வழக்கறிஞர் வேலவன், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், நகர நிர்வாகிகள் சுந்தர், அஜீஸ், பாஸ்கர், மணிமாறன், குமரன், கவுதம், அகல்யா வேலு, அமுதா, சரவணன், பன்னீர், முனியப்பன், கமலக்கண்ணன், செந்தில், ராஜா, நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை