சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர். மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பெரியார் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள அவரது சிலைக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சியினர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, விழுப்புரம் கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், கப்பூர் ராஜா, திருவக்கரை பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத் மற்றும் மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.