தெற்கு நகர அ.தி.மு.க., பூத் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க., சார்பில் 17, 18வது வார்டு பூத் பொருப்பாளர்கள் கூட்டம் நடந்தது.நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர்கள் ராம்குமார், பாஸ்கர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம, பூத் பொருப்பாளர்களை நியமனம் செய்து அதற்கான ஆணைகள் வழங்கினார். மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தங்க சேகர், ஒன்றிய செயலாளர் கண்ணன், ஆவின் தொழிற்சங்க தலைவர் செல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் பாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் தமிழரசன், வார்டு செயலாளர்கள் கிருஷ்ணன், கலை, ஜியாவுதீன், பாஸ்கரன், மாணவரணி செயலாளர் பார்த்தீபன், வர்த்தகரணி செயலாளர் ரகுராமன், இளைஞரணி செயலாளர் முத்துவேல், பாசறை செயலாளர் நீலமேகம், மகளிரணி கீதா, மல்லிகா, பாசறை தலைவர் அன்பு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.