தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் வரவேற்றார். மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதாவது; தமிழத்தின் நிரந்தர முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும். 4 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மக்கள் அடிக்கடி மறந்துவிடுவர். நாம் தான் நினைவுபடுத்த வேண்டும். முதல்வர் செய்த சாதனைகள், திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் கூற வேண்டும். பூத் கமிட்டி முகவர்கள் இப்பணியை இன்றே துவங்க வேண்டும். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறினார். தமிழக பல்கலை கழக வேந்தராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தல், கருணாநிதி 101வது பிறந்த நாளை தெற்கு மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர் சிவஜெயராஜ், மாநில மகளிரணி பிரசார செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், ஒன்றிய செயலாளர் தங்கம், கல்பட்டு ராஜா, ரவிச்சந்திரன், ரவி, விஸ்வநாதன், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.