மேலும் செய்திகள்
பணி நிறைவு பாராட்டு
22-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட த.மா.கா., புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். நகர தலைவர் அரிபாபு வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் வேங்கடசாமி, குமார், தொழிற்சங்க தலைவர் பரந்தாமன், மகளிரணி தலைவி வேல்விழி, எஸ்.சி., எஸ்.டி., தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், மாவட்ட தலைவர் தசரதன் பரிந்துரையின் பேரில், நியமனம் செய்யப்பட்ட தெற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ்பாபு, துணை தலைவர்கள் வேங்கடசாமி, குமார், பொது செயலாளர்கள் ரஞ்சித்குமார், சங்கர், மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், பழனி, செல்வமுத்துக்குமரன், முருகையன், நகர தலைவர் அரிபாபு உட்பட செயற்குழு, பேரூராட்சி, சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைகாலத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற வடிகால் வாய்க்கால் பணி மேற்கொள்ள வேண்டும். கோலியனுாரான் வாய்க்கால் சுத்தப்படுத்தி துார்வார வேண்டும், பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை விரைவாக கிடைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர இளைஞரணி தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
22-Apr-2025