உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்: போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவு

விழுப்புரம்; விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்டத்தில் குற்ற தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். அனைத்து காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். அந்தந்த காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் நிர்வாக பதிவேடுகள், தினசரி ரோந்து பணி, தொடரும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க எடுக்க வேண்டிய செயல்முறைகள், முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., பொருத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.மாவட்டத்தில் தொடர் விபத்து நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்து, விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபானம் கடத்தல் மற்றும் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த மற்றும் சி.சி. டி.வி., கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு ெதரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி