வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,970 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.காணை பகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கணேசன் உடனிருந்தனர்.இதேபோல் விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியில் நடந்த முகாமை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உடனிருந்தனர்.இதே மையத்தில், தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி ஆய்வு செய்தார். மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், மாணவர் அணி ஸ்ரீவினோத், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, முன்னாள் ஊராட்சி தலைவர் பால்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.