உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்

கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.தென்மங்கலம் கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு, கரும்பு அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். உதவியாளர் ஏழுமலை வரவேற்றார்.முகாமில், இயந்திர சாகுபடிக்கு ஏற்ப அகல பார் முறையில் கரும்பு நடவு செய்ய வேண்டும். கரும்பு அறுவடைக்கு எளிதாக அறுவடை இயந்திரம் ஆலை மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மாநில விபரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.மேலும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். கரும்பு பெருக்கு உதவியாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை