உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.விக்கிரவாண்டி தாலுகாவில் வசிக்கும் புதிரை வண்ணார் இன மக்களுக்குகான சிறப்பு முகாமிற்கு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்த ஆதார் அட்டை, ஜாதிசான்று, ரேஷன் கார்டு, பிறப்பு சான்று கேட்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார்.மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். தேர்தல் துணை தாசில்தார் பாரதிதாசன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் புதிரை வண்ணார் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !