உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி : கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி : கலெக்டர் ஆய்வு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சியில் நடந்து வரும் வாக்காளர் திருத்த பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். தமிழகம் முழுதும் கடந்த 4ம் தேதி துவங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் இப்பணி நடந்து வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல்களை சரி பார்த்து வருகின்றனர். கோட்டக்குப்பம் இந்திரா நகர், சின்ன முதலியார்சாவடி பகுதிகளில் நடந்த இப்பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பணிகள் நடந்து வருவதை உறுதி செய்தார். அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது, வானுார் ஓட்டுப்பதிவு அலுவலர் ராஜூ, தாசில்தார் வித்யாதரன், கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் பாலமுருகன் உடனிருந்தனர். திண்டிவனம் திண்டிவனம் 12வது வார்டில் தீர்தக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் வாக்காளர் படிவம் வழங்கப்பட்ட வாக்காளர்களிடம், திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேற்று காலை ஆய்வு செய்து விபரம் கேட்டறிந்தார். நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், கவுன்சிலர் சரவணன், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை