உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

இ.எஸ்., மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

விழுப்புரம்; விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் இ.எஸ்., மருத்துவமனை உள்ளது. இங்கு, மகளிர் தினத்தை யொட்டி, சாந்தா மெடிக்கல் பவுண்டேசன் சார்பில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (17ம் தேதி ) முதல் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.காலை 7.00 மணி முதல் பகல் 12.00 வரை நடக்கவுள்ள முகாமில், சக்கரை அளவு, தைராய்டு சோதனை, ரத்த செல் எண்ணிக்கை, சிறுநீர் முழு பரிசோதனை, கருப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து, மகளிர் டாக்டரின் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்கான சலுகை கட்டணமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே பெறப்படுகிறது.இதற்கான முன்பதிவு செய்ய விரும்புவோர், தொலைபேசி 04146- 251035, 221100 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ