மேலும் செய்திகள்
பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கியவர் மீது வழக்கு
24-May-2025
விழுப்புரம் : பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நேற்று காலை 7.00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட தலைவர் சல்மான் பாரிஸி தலைமை தாங்கி, பக்ரீத் பண்டிகை சிறப்புகள் பற்றி கூறினார். தொழுகை முடிந்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. செஞ்சி
செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்காகனோர் பங்கேற்றனர். சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, பள்ளி வாசல் தலைவர்கள் ஹனீப், கவுஸ் பாஷா, இப்ராஹிம், சையத் அமீன் பங்கேற்றனர். திண்டிவனம்
திண்டிவனம், ரோஷணை, கிடங்கல், செஞ்சி ரோடு உள்ளிட்ட 15 பள்ளி வாசல்களில் இருந்தும் நேற்று காலை 8:00 மணிக்கு முஸ்லீம்கள் நேரு வீதியில் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று, மயிலம் ரோட்டில் உள்ள மஸ்ஜிதே குபா வக்ப் வாரியம் பள்ளி வாசல் மைதானத்தில் திரண்டு, சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். நவாப் பள்ளி வாசல் ஹஜ்மல் அலி, புது பள்ளி வாசல் அகமத் பாஷா, கிடங்கல் பள்ளி வாசல் அகமத் பாஷா உள்ளிட்ட 15 பள்ளி வாசல் பேஷ் இமாம்களும், பள்ளி வாசல் தலைவர்களும் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் உள்ள ஜூம்மா மசூதியில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று திருச்சி- சென்னை சாலையில் ஒயிட் மசூதி அருகில் கபர்ஸ்தானில் கூடினர். மதகுரு சிராஜூதீன் தலைமையில் அங்கு தொழுகை மேற்கொண்டனர்.
24-May-2025