அரசு மகளிர் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு
விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடந்தது.விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26 ம் ஆண்டிற்கு, கல்லுாரியில் உள்ள 1000 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக, 24,778 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., முன்னாள் வீரர்கள் பிரிவுகளில் 218 பேர் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செல்வராணி தலைமையிலான குழுவினர் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். மேலும், பொது கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.