உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் வார்டு சிறப்பு கூட்டம்

விழுப்புரத்தில் வார்டு சிறப்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி, மாசிலாமணிப் பேட்டையில் 9வது வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கவுன்சிலர் ராதிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில், 9வது வார்டுக்குட்பட்ட காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலத்தில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து இடையூறாக திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். கமலா நகர், முருகையன் லே அவுட், உமர்கான்பேட்டை, அருணாச்சலம் தெரு, ஜால்னா தெரு பகுதி சாலைகள் பழுதடைந்துள்ளது. புதிதாக சிமென்ட் சாலை அமைத்திட வேண்டும். வடக்கு தெரு பகுதியில் 2 கோவில்கள், 2 பள்ளி வாசல்கள் உள்ளன. இப்பகுதியில் போதிய வெளிச்சம் தரும் வகையில் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சி வரி வசூல் அலுவலர் அன்பரசி, ஹைதர் ஷெரீப், கீதா ரத்தினம், ரேவதி, உஷா, செந்தில், முருகன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ