உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விழுப்புரம், : விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில், விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் அன்பு முன்னிலை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் வரவேற்றார். திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி பிரக்யாஸ்ரீ, இரண்டாம் இடம்பிடித்த மாணவர்கள் தீக்ஷா, ரோஹித், சிந்துஜா மற்றும் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கயல், வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி அகல்யா ஆகியோருக்கு, பள்ளியின் தாளாளர் சோழன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ