உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு தின விழா

விளையாட்டு தின விழா

மயிலம்: மயிலம் அருகே உள்ள ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43வது விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். ஹோலி ஏஞ்சல் கல்வி குழும இயக்குனர் கீர்த்திவாசன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட உடற்க்கல்வித் துறை ஆய்வாளர் செந்தில்குமார், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார். விழாவில், ஒலிம்பிக் உறுதி மொழியேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் மாஸ் ட்ரில், கோலாட்டம், அரேபிய டான்ஸ், பிரமிடு நிகழ்ச்சிகள் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி