உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளுக்கும் ரூ.65.61 லட்சம் மதிப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ரூ.9.98 லட்சம் மதிப்பில் வேலை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சையத்முகமத் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., விளையாட்டு மற்றும் வேலை உபகரணங்களையும், பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் 28 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்திசுப்ரமணியன், செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதை, ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், விஜயலட்சுமிஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ