மேலும் செய்திகள்
துணை முதல்வர் உதயநிதி இன்று ஈரோடு வருகை
30-Dec-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, விழுப்புரத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பின், கலெக்டர் கூறுகையில், துணை முதல்வர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த நவம்பர் மாதம் வருகைபுரிந்து கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 688 ஊராட்சிகளுக்கு 825 கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளிலுள்ள 210 வார்டுகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 312 தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 10 நகர்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வாகனங்கள் மூலமாக கொண்டு சேர்க்கப்படும்' என்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஆழிவாசன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
30-Dec-2025