உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழுப்புரம், நகராட்சி வார்டுகள் 9, 10, 12 ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமை தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றதோடு, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நகராட்சி ஆணையர் வசந்தி வரவேற்றார். தாசில்தார் கனிமொழி உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர சேர்மன் ஜனகராஜ், சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, நகர பொறுப்பாளர் வெற்றிவேல், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி ஜமாலுதீன், தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ்பாபு, கவுன்சிலர் பத்மநாபன், வார்டு செயலாளர்கள் மதாவராஜா, சம்பத் குமார், பிரதிநிதிகள் ரஹ்மத்துல்லா, குமரன், ரபீதீன், கருணாகரன் நிர்வாகிகள் ராஜி, அபுதாஹிர் , முத்துக்குமாரன், சுதாகர், தேவா, சாதிக்பாஷா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ