உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன்  ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன்  ஸ்டாலின் திட்ட முகாம்

மயிலம்: வீடூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, பி.டி.ஒ.,க்கள் சிவக் குமார், இளங்கோ, திண்டி வனம் தாசில்தார் யுவராஜ், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் புனிதா ராமஜெயம் வரவேற்றார். முகாமில், திரளான பொதுமக்கள் கோரிக்கை குறித்த மனுக்களை வழங்கினர். சிவக்குமார் எம்.எல்.ஏ, தி.மு.க., வடக்கு மாவட்ட அவை தலைவர் சேகர், முன்னாள் எம்.எல் .ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன்து துவக்க உரையாற்றினர். மயிலம் ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், ஊராட்சி தலைவர்கள் பானுமதி, அங்கை யர்கன்னி, தி.மு.க., நிர்வாகிகள் ஜெயராமன், சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை