விழுப்புரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விழுப்புரம்; விழுப்புரம், தி.வி.நல்லூர், கோலியனூர், முகையூர், மயிலம் பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, முகாம் இன்று விழுப்புரம் நகராட்சி ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் நடக்கிறது. மேலும் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம் ராயர் மண்டபம், முகையூர் ஒன்றியம் வீரபாண்டி சமுதாய கூடம், கோலியனுார் ஒன்றியம் கண்டமானடி ஒன்றிய தொடக்கப்பள்ளி், மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டு திருமண மண்டபத்தில் நடக்கிறது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.