உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விழுப்புரம்; விழுப்புரம், வளவனுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, முகாமில் பயன் பெற அறிவுறுத்தினார். கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், வளவனுார் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி, தி.மு.க., வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தலைமை வழக்கறிஞர் சுவைசுரேஷ், ஒன்றிய அவை தலைவர் கண்ணப்பன், துணை தலைவர் அசோக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, மாவட்ட விவசாய அணி கேசவன், மாவட்ட இளைஞரணி கலைவாணன், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரகுமான், வார்டு செயலாளர்கள் பெரியசாமி, முருகன், குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பார்த்திபன், பாஸ்கரன், சசிகலா கபிரியேல், மகாலட்சுமி செந்தில், சந்திரா பாண்டியன், வடிவேல், சிவசங்கரி அன்பரசு, திருசங்கு, நகர தொண்டரணி அங்கப்பன், இளைஞரணி முருகன், தகவல் தொழில்நுட்ப அணி ராஜேஷ், மாணவரணி ரஞ்சித்குமார், வேணுகோபால், கனகராஜ், சுரேந்தர், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.