உங்களோடு ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி, செஞ்சி, மேல்மலையனுார், விக்கிரவாண்டி, கண்டமங்கலம் ஒன்றியங்களில் நாளை உங்களோடு ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி மங்களாம்பிகை மண்டபத்தில் நடக்கும் முகாமில், வார்டு 1 முதல் 7 வரையுள்ள பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம். செஞ்சி ஒன்றியம், கடலாடிகுளம் அக்ஷயா துரைமுருகன் மண்டபத்தில் நடக்கும் முகாமில் செம்மேடு, பாக்கம், புதுப்பாளையம், செ.பேட்டை ஊராட்சிகளை சேர்ந்த மக்களும், மேல்மலையனுார் சிவன் அருள் மண்டபத்தில் நடக்கும் முகாமில், மேல்மலையனுார், தொரப்பாடி, வடபாலை, தென்பாலை ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கலாம். விக்கிரவாண்டி ஒன்றியம், பனையபுரம் எஸ்.ஆர்., மண்டபத்தில் நடக்கும் முகாமில், பனையபுரம், ஆசூர், வி.சாத்தனுார் ஊராட்சி மக்களும், கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளிப்புதுப்பட்டு இ.ஆர்.எம்., மித்ரா மண்டபத்தில் நடக்கும் முகாமில், மிட்டா மண்டகப்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சி மக்களும் மனுக்களை வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.