உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திண்டிவனம்: ஓங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் நடந்தது. ஓங்கூர், கூச்சிக்குளத்துார், பாதிரி, கம்பூர், வடகளவாய் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடந் முகாமிற்கு, ஒலக்கூர் சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தார். ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கரலிங்கம், தோட்டக்கலைத்துறை அதிகாரி காரல்மார்க்ஸ் விளக்க உரையாற்றினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கம்பூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். முகாமில் மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, பஞ்சாயத்து தலைவர்கள் கண்ணன், இந்திரா, காளியம்மாள், குல்ஜார்பீ, சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி