உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திண்டிவனம் : திண்டிவனம், நகராட்சி சார்பில் தீர்த்தக்குளத்திலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று, 18, 19 மற்றும் 27 வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், மஸ்தான் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி மேலாளர் நெடுமாறன், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், கவுன்சிலர்கள் லட்சுமிபிரபா, ஷபியுல்லா, பிர்லாசெல்வம்,சரவணன், மாவட்ட வர்த்தகர் அணி பிரகாஷ், பரணிதரன், நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை