உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில கட்கா போட்டி: மாணவர்கள் சாதனை 

மாநில கட்கா போட்டி: மாணவர்கள் சாதனை 

விக்கிரவாண்டி: மாநில அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சாதனை படைத்தனர். பஞ்சா ப் மாநில பாரம்பரிய தற்காப்பு கலையான, கட்கா விளையாட்டு போட்டி, கடந்த செப்டம்பரில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. ஜூனியர், ஒற்றையர் பிரிவில், விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியை சேர்ந்த, எம். ஜி.ஆர்., கலைக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பிரதீபா, முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி புவனேஸ்வரி; பிளஸ் 2 மாணவர் சிவபாலன்,17; ஆகியோர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தனர். சிந்தாமணி அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும், 7ம் வகுப்பு மாணவி நிர்விந்தா, மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை