திண்டிவனத்தில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஊஷூ போட்டி துவக்கம்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில், மாநில அளவிலான சப் ஜூனியர் ஊஷூ போட்டி துவங்கியது. கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதரம் சந்த் ஜெயின் பள்ளியில் மாநில சப் ஜூனியர் ஊஷூ போட்டி நேற்று காலை துவங்கியது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஊஷூ துணை தலைவரும், பள்ளியின் தாளாளருமான ஜின்ராஜ், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, தமிழ்நாடு ஊஷூ சங்கத் தலைவர் அலெக்ஸ் அப்பாவு, செயலாளர் ஜான்சன், துணைச் செயலாளர் நவகோடி நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கி, போட்டியினை துவக்கி வைத்தனர். பள்ளியின் முதல்வர் சாந்தி வரவேற்றார். இப்போட்டியில் விழுப்புரம், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் உட்பட 27 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும் போட்டிகள் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியை, விழுப்புரம் மாவட்டம் ஊஷூ சங்க நிர்வாகிகள் ஏழுமலை, ஜெயச்சந்திரன், விஜயபாரத், முருகன், கோபிநாத், குணசேகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.