உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி

இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் நிதி

விழுப்புரம் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், இறந்த தொழிலாளர்கள் 8 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக, விழுப்புரம் மண்டலம் சார்பில், போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட நிதி வழங்கப்பட்டது.விழுப்புரம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இறந்த தொழிலாளர்கள் 8 பேரின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர் நடேசன் ஆகியோர் வழங்கினர். விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை