உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளத்தியில் தெருமுனை பிரசாரம்

வளத்தியில் தெருமுனை பிரசாரம்

அவலுார்பேட்டை : வளத்தியில் வி.சி., சார்பில் தெரு முனை பிரசாரம் நடந்தது.மேல்மலையனுார் ஒன்றிய வி.சி., சார்பில் சிறப்பு வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து தெருமுனை பிரசாரம், செயற்குழு கூட்டம் வளத்தியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் துரைவளவன், இனியவளவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் தெரு முனை பிரசாரத்தை துவக்கி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், வரும் 14 ம் தேதி திருச்சியில் நடக்கும் மதசார்பின்மை பேரணியில் மேல்மலையனுார் ஒன்றியத்திலிருந்து 25 வாகனங்களில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ