மேலும் செய்திகள்
விழிப்புணர்வு
05-Apr-2025
மாணவர்களை கவுரவித்த ஆசிரியர்கள்
06-Apr-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.அமாவாசைபாளையம் கிராமத்தில் நடந்த ஊர்வலத்திற்கு தலைமையாசிரியர் கலா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்படி பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினர்.ஆசிரியர்கள் கதிரேசன், முருகன், கஸ்துாரி, மும்மூர்த்தி, சுந்தரபாண்டியன், ஆண் டோமெர்லின் கிறிஸ்டினால், சாரதா, வாசுதேவன், சத்தியவேணி, பிரசாந்தி, லீலா, கோகுல லட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
05-Apr-2025
06-Apr-2025