பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மகன் கோகுல்நாத், 17; இவர், கெடா ர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதில் கோகுல்நாத் தமிழ், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.இதனால் மனமுடைந்த அவர், சிறுவாலையில் விவசாய நிலத்தில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கெடார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.