உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெற்றோர் திட்டியதால் மாணவன் மாயம்

பெற்றோர் திட்டியதால் மாணவன் மாயம்

விழுப்புரம் : பெற்றோர் திட்டியதால் மாணவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,40; கூலி தொழிலாளி. இவரது மகன் மதன்ஸ்ரீ, 14; இவர், விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மதன்ஸ்ரீ நேற்று முன்தினம் பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளார். வீட்டிற்கு வந்தபோது, அதனை கேட்டு, பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மதன்ஸ்ரீ கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து, அவரது தாயார் பரிமளா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி