உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த டி.புதுப்பாளையம் கிராம மாணவர்கள் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்தனர்.முட்டத்துார் சிலம்பம் பள்ளியில் பயிற்சி பெற்ற, இக்கிராமத்தை சேர்ந்த மாணவி ஆர்த்தி,14; பெண்கள் பிரிவிலும், மாணவர் பிரவீன், 12; ஆண்கள் பிரிவிலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்.சிதம்பரம், புதுச்சேரியில் தனியார் அமைப்பு நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தனுபிரகாஷ்,12; ரோகித்,10; ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சிவசங்கரி,10; கிருத்திகா,9; சத்திய நாராயணசாமி, 9; தஷ்விகா, 9; ஓவியா, 6; ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர் சுரேந்தர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி