உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு விழுப்புரத்தில் மாணவர்கள் உற்சாகம்

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு விழுப்புரத்தில் மாணவர்கள் உற்சாகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறககப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,295 அரசு பள்ளிகள், 282 தனியார் பள்ளிகள், 196 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள், 23 பகுதிநேர நிதியுதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,796 பள்ளிகள் திறக்கப்பட்டது.கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டதால், வீடு மற்றும் கோவில்களில் மாணவர்கள் வழிபாடு செய்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.பல பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று இனிப்பு கொடுத்தனர். மேலும், அரசு உத்தரவுப்படி பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை