உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை புதிய குழாய் அமைக்க ஆய்வு

பாதாள சாக்கடை புதிய குழாய் அமைக்க ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாதாள சாக்கடையில் சேதமடைந்த குழாய்களை மாற்றம் செய்து புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடந்தது. விழுப்புரம், காகுப்பம் சாலையில் உள்ள ராணுவ கேண்டின் அருகில் பாதாள சாக்கடையில் சேதமடைந்த குழாய்களை மாற்றம் செய்து புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பாக இன்று (நவ.,4) ஆய்வு செய்யப்பட்டது. லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சிகளின் வேலுார் மண்டல பொறியாளர் ராஜேஷ் கண்ணா, நகராட்சி கமிஷ்னர் ஷியாமளா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம், லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறியதாவது; காகுப்பம் மற்றும் எருமணந்தாங்கல் ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு எவ்வளவு கழிவுநீர் உள்ளே வருகிறது. வெளியே எவ்வளவு கழிவுநீர் செல்கிறது என்பதை கண்டறிய மீட்டர் பொருத்த வேண்டும். எருமணந்தாங்கலில் குளோரின் கலந்து கழிவுநீர் வெளியேற்ற வேண்டும். மாம்பழப்பட்டு ரோடு, கமலா கண்ணப்பா நகர் மெயின் ரோடில் பாதாள சாக்கடைப் பணி சரிசெய்யப்பட்டு, பழுதடைந்த தார் சாலையை நகராட்சி பொது நிதியிலிருந்து டெண்டர் விடப்பட்டு இன்று வரை தார்சாலை அமைக்கவில்லை. உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும். மகாராஜபுரம் தகனமேடை சுற்றுச்சுவர் மற்றும் இதரப்பணிகள் முடிவடைந்ததால் உடனடியாக திறக்க வேண்டும். விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தை டவுன் ஹாலாக மாற்றி, பணிகள் நடந்து வந்தது. தற்போது அந்த வேலை நடக்கவில்லை. அப்பணியை மீண்டும் துவக்கி உடனடியாக திறக்க வேண்டும். ஓ.சி.இ.எம்.எஸ்., இயந்திரம் வேலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ