உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோட்டக்குப்பம் அருகே இரும்பு கடையில் திடீர் தீ விபத்து  

கோட்டக்குப்பம் அருகே இரும்பு கடையில் திடீர் தீ விபத்து  

கோட்டக்குப்பம்; புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார், 47; இவர் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் பழைய ஆரோவில் ரோட்டில், கடந்த நான்கு ஆண்டுகளாக பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் முத்துக்குமார் தனது, கடையை மூடி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை 3;00 மணிக்கு, அவரது கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள், வானூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் முகுந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகின்றது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து விட்டார்களா என்று தெரிய வில்லை. இது குறித்து முத்துக்குமார் கொடுத்துள்ள புகாரின் பேரில் , கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை