மேலும் செய்திகள்
ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி
23-Sep-2024
மரக்காணம்ச திண்டிவனம் அடுத்த மானுாரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.ஆத்மா திட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான பயிற்சிக்கு, மாவட்ட இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கி, கரும்பு சாகுபடியில் குழித்தட்டு நாற்றங்களின் உபயோகம், நுண்ணுயிர், நுண்ணுரம் பயன்பாடு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் கையாளுதல், டிரைகோக்ராமா ஒட்டுண்ணி பயன்பாடு நுண்ணீர் பாசனம் மற்றும் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும், விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் தொடர்ந்து பயன் பெறுவது குறித்தும் பேசினார்.ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையின் உதவி மேலாண்மை அலுவலர் தேவராஜ், கரும்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு சாகுபடியில் இயந்திர பயன்பாடு குறித்தும், சொட்டு நீர் பாசனம் மூலம் திரவ உரங்கள் உபயோகிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.
23-Sep-2024