உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

விழுப்புரம், : விழுப்புரத்தில் கோடைகால கூடைபந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, கடந்த மே மாதம் முதல் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பூங்கா மைதானத்தில் கூடைப்பந்து அகாடமி சார்பில் கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.பயிற்சி முகாம் நிறைவு விழா, கடந்த 14ம் தேதி நடந்தது. கூடைப்பந்து அகாடமி தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் ஜீவானந்தம், மாணவர்களுக்கு பரிசளித்தார். நிர்வாகிகள், பரணிதரன், அரவிந்தன், பயிற்றுனர்கள் அருண்சுபம், கோபாலகிருஷ்ணன், ஜோசபின், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி