உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மானிய விலையில் உளுந்து வழங்கல்

 மானிய விலையில் உளுந்து வழங்கல்

வானுார்: பரங்கினி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாற்றுப் பயிர் திட்டத்தில் விவசாயிகளுக்கு உளுந்து மற்றும் இடு பொருட்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வானுார் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் வேளாண்மைத் துறை, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பிற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை உளுந்து சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதைகள், ஒரு கிலோ சூடோமோனாஸ், ஒரு லிட்டர் திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வானுார் அடுத்த பரங்கினி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உளுந்து விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வழங்கினார். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை வழங்கப்படும். மேலும், டி.ஏ.பி ஊட்டச்சத்து கரைசல் தெளித்திட ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக 475 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு எத்திராஜ் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாலட்சுமி, சுரேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் அறிவழகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை