உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டா மாற்றத்திற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ, 45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் வீடுகட்ட மனை வாங்கினார். அந்த மனையை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்யக்கோரி, நில அளவையர் ஸ்டாலின்,27; நரையூரை சேர்ந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன்,54; ஆகியோரை அணுகினார்.அதற்கு, இருவரும், ரூ.3,000 லஞ்சம் கேட்டு, பணத்தை வளவனுார் குமாரகுப்பம் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே வந்து தரும்படி தெரிவித்தனர். ராஜூ இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, வளவனுார் குமாரகுப்பம் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே நின்றிருந்த ஸ்டாலின், கிருஷ்ணனிடம், ரசாயன பொடி தடவிய பணத்தை ராஜூ கொடுத்தார்.பணத்தை வாங்கிய போது, லஞ்சஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ஸ்டாலின், கிருஷ்ணனை மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி