வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வேலைக்காகாது காசு மட்டும். தீர்மானிக்கும் மற்றபடி எதும் இல்ல
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்களின் வீடு தேடிச் சென்று மாலை அணிவித்து த.வெ.க., நிர்வாகிகள் வாழ்த்து கூறி புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 16 மற்றும் 17ம் தேதி நடந்தது. இதற்கு தகுதியானவர்களைக் கண்டு பிடித்து முகாமில் முன்னின்று மனு கொடுத்து அவர்களிடம் நன் மதிப்பை பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளன.இதனால் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சேர்மன்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முகாம் நடக்கும் பகுதிக்கு சென்று ஆட்களை பிடித்து வந்து மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாங்க வேற மாதிரி என்பதை போல் செஞ்சியில் த.வெ.க., வினர் தொகுதி பொறுப்பாளர் குணா சரவணன் தலைமையில் ஒன்றிய தலைவர் பாண்டியன், நகர தலைவர் நஸ்ருதீன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக மனு கொடுத்துள்ள புதிய வாக்களர்களின் வீடு தேடிச் சென்று புதிய வாக்காளருக்கு மாலை அணிவித்து, பழம், இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய ட்ரண்டை உருவாக்கியுள்ளனர்.இந்த புதிய அனுகுமுறை இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதால் மற்ற கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலைக்காகாது காசு மட்டும். தீர்மானிக்கும் மற்றபடி எதும் இல்ல