மேலும் செய்திகள்
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
14-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாக நீச்சல் பயிற்சி மையத்தில், ஸ்டார் அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. துணை முதல்வர் உதயநிதி சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நீச்சல் பயிற்சி மையத்தில், அமைக்கப்பட்ட ஸ்டார் அகாடமி நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான் திறந்து வைத்தனர். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி, துணை தலைவர் சித்திக்அலி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
14-Apr-2025