மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
02-Oct-2025
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் புதிய தாசில்தார் வேலு பொறுப்பேற்றுக் கொண்டார். மேல்மலையனுார் தாசில்தார் தனலட்சுமி வானுார், மொரட்டாண்டி தனி தாசில்தாராக (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை அலகு 1) இட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திண்டிவனம் நில எடுப்பு பிரிவில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த வேலு, மேல்மலையனுார் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
02-Oct-2025