உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பானுமதி பொறுப்பேற்றார். திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, விருத்தாசலம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த பானுமதி, திண்டிவனம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். விழுப்புரம் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்த ஜெய்சங்கர், ஊட்டி மண்டலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பொதுமேலாளராக பணிபுரிந்து வந்த ஜெகதீஷ், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டு விழுப்புரம் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை