உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்சசீலா மருத்துவக் கல்லுாரி கல்வியாண்டு துவக்க நிகழ்ச்சி

தட்சசீலா மருத்துவக் கல்லுாரி கல்வியாண்டு துவக்க நிகழ்ச்சி

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தில், தட்சசீலா மருத்துவ கல்லுாரி இந்தாண்டு முதல் இயங்குகிறது. இந்த கல்லுாரியில், இக் கல்வியாண்டிற்கான துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக்கழகவேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். மருத்துவ புலங்களின் டீன் ஜெயஸ்ரீ வரவேற்றார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் சிறப்புரையாற்றினர். பதிவாளர் செந்தில், துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், மணக்குள விநாயகர் மருத்துவமனை இயக்குனர் காக்னே, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் மலர்கண்,. மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்தமிழ்ச்செல்வி, மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி உட்பட துணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இணைப்பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, கலை அறிவியல் புலங்களின் டீன் தீபா, நிர்வாக புலங்களின் டீன் சீத்தாராமன். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கோபாலக்கண்ணன் உட்பட துறை தலைவர்கள், பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். தட்சசீலா மருத்துவ கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை