மேலும் செய்திகள்
வீடு கட்ட பணி ஆணை வழங்கல்
07-Jun-2025
செஞ்சி : செஞ்சி அடுத்த மேல்எடையாளம் கிராமத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை பணி பூமி பூஜையுடன் துவங்கியது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வி செல்வமணி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், துரை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், துணை தலைவர் ராதிகா ராஜேஷ், ஒன்றிய அவை தலைவர் வாசு மாவட்ட பிரதி அய்யாதுரை, இளைஞரணி பழனி உட்பட பலர் பங்கேற்றனர். அவலுார்பேட்டை
வளத்தி அடுத்த கீழ்செவலாம்பாடியிலிருந்து கெங்கபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடந்தது.முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 94.72 லட்சம் மதிப்பீட்டிலான புதிய சாலைக்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.ஒன்றிய சேர்மன் கண்மணி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
07-Jun-2025