மேலும் செய்திகள்
அரசுப்பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
10-Jul-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாவட்ட மேலாளர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் ரமேஷ், துணை தலைவர் அசோகன், பிரசார செயலாளர் சிவப்பிரகாசம், இணை செயலாளர்கள் ராஜூ, தாகாப்பிள்ளை முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில இணை பொது செயலாளர் சிவக்குமார் பேசினார். கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, துணை தலைவர் வீரப்பன், நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர்க்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
10-Jul-2025