உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஆசிரியர்கள் போராட்டம் :பிரசுரம் வழங்கி பிரசாரம்

 ஆசிரியர்கள் போராட்டம் :பிரசுரம் வழங்கி பிரசாரம்

விழுப்புரம்: சம வேலைக்கு சம ஊதியம் என்ற தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு வரும் 26ம் தேதி போராட்டத்தில் ஈடுபட இருப்பதையொட்டி துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமி ழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க., இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், மாவட்டத்தில் 13 ஒன்றியங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வரும் 26ம் தேதி முதல் குடும்பத்தோடு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். போராட்டத்தை பிரசாரம் செய்யும் வகையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் ஜோஸ் தலைமையில் நிர்வாகிகள், போராட்டம் குறித்து துண்டு பிரசுரங்களை, இடைநிலை ஆசிரியர்களிடம் விநியோகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை