இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: விழுபபுரம் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மகள் தீபிகா, 25; பி.எஸ்சி., பட்டதாரி. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த 6ம் தேதி இரவு திருச்சியில் இருந்து காவணிப்பாக்கத்திற்கு வருவதாக கூறிய அவர், வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.