கோவில்மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்; விழுப்புரம் அருகே கோயிலுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கு, பட்டா வழங்க வலியுறுத்தி, குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோலியனுார் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்பு நல சங்கம் சார்பில், கோலியனூர் புத்துவாய் அம்மன் கோயில் எதிரே நடந்த கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினார். சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.கோலியனுாரில், கோவிலுக்கு சம்பந்தமில்லாத இனாம் நிலங்களை தவறுதலாக மாற்றப்பட்ட யூ.டி.ஆர்.ஐ., வைத்து, உரிமை கொண்டாடுவதை தடுத்து நிறுத்தி, பல தலைமுறையாக அங்கு வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமில்லாத புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவருக்கு வாழ்வுரிமை அளிக்க வேண்டும். கோயில் மனைகளில் வாழ்வோருக்கு சதுர அடி கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை ரத்து செய்து, பழைய முறையை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.